நீ விழையாட விலை பேசுவேன் நட்சத்திரங்களை
நீ கிறுக்கவே சுவரெல்லாம் வர்ணமடிப்பேன்
நீ குலைக்கவே நான் அடுக்கி வைப்பேன்
நீ மணல் வீடு கட்ட அலைகளுக்கு அளிப்பேன் விடுமுறை
நீ பேசுவது தான் தமிழ் எனக்கு
நீ பேசா வார்த்தை இனி எதற்கு
உன் நிலாசோறுகளில் நான் செய்வேன்
வானம் நிறைய நிலாக்களும்
நிலா நிறைய ஔவையும்
இதுவரைக்கும் நீங்க சொல்லி கேட்ட, படித்த கவிதைகளில் இதுதான் உருப்படியான கவிதை.
பதிலளிநீக்குஅதுவும் குழந்தை முகம் காட்டி குறை சொல்லமுடியாத மாதிரி செய்துவிட்டீற்........புத்திசாலி கவிஞர்.......இராமகிருட்டிணன்