ஞாயிறு, 22 நவம்பர், 2009

நான் செய்த வானவில்


நீ விழையாட விலை பேசுவேன் நட்சத்திரங்களை

நீ கிறுக்கவே சுவரெல்லாம் வர்ணமடிப்பேன்

நீ குலைக்கவே நான் அடுக்கி வைப்பேன்

நீ மணல் வீடு கட்ட அலைகளுக்கு அளிப்பேன் விடுமுறை




நீ பேசுவது தான் தமிழ் எனக்கு
நீ பேசா வார்த்தை இனி எதற்கு

உன் நிலாசோறுகளில் நான் செய்வேன்
வானம் நிறைய நிலாக்களும்
நிலா நிறைய ஔவையும்

1 கருத்து:

  1. இதுவரைக்கும் நீங்க சொல்லி கேட்ட, படித்த கவிதைகளில் இதுதான் உருப்படியான கவிதை.
    அதுவும் குழந்தை முகம் காட்டி குறை சொல்லமுடியாத மாதிரி செய்துவிட்டீற்........புத்திசாலி கவிஞர்.......இராமகிருட்டிணன்

    பதிலளிநீக்கு